Alla Alla Panam 3 - Panguchanthai - Futures and Options: 1 (170.0) Paperback – 1 December 2008

Soma Valliappan . Kizhakku . Tamil

நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O). பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Categories: Business & Economics

About the Author

BHEL, வேர்ல்பூல், பெப்சி, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர். BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் செய்பவர். அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், உட்பட தமிழில் 50 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில. ஆனந்தவிகடன், குமுதம், நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 19 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். விஜய் டிவி, சன், புதிய தலைமுறை , பொதிகை, கலைங்கர் , மக்கள் டி.வி. ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்துகளை பதிவுசெய்கிறார். தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் தலைமை நிர்வாகியாக இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து வருகிறார். கூடுதல் தகவல்களுக்கு : www.writersomavalliappan.com

Books from Similar Categories

Books from the Same Genre

Download BookR now and choose mindful reading!

Download Now!